ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (12:03 IST)

மிகக்குறைவான விலையில் ஆஃபருடன் கிடைக்கும் Nokia C01 Plus!

நோக்கியா நிறுவனத்தின் Nokia C01 Plus ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
நோக்கியா நிறுவனத்தின் Nokia C01 Plus கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் புதிய 32 வேரியண்ட் தற்போது சலுகை விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
Nokia C01 Plus சிறப்பம்சங்கள்: 
# 5.45 இன்ச் ஹெச்.டி+ டிஸ்பிளே, 
# 18:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 
# 295ppi பிக்ஸல் டென்சிட்டி, 
# 1.6Hz 1.6GHz octa-core Unisoc SC9863a SoC பிராசஸர், 
#  f/2.4 அப்பேர்சர் கொண்ட 5 மெகாபிக்ஸல் கேமரா, 
# 2 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 
# இரண்டு கேமராக்களிலும் LED ஃபிளாஷ் சப்போர்ட், 
# 3000mAh பேட்டரி, 5w சார்ஜிங் 
 
விலை விவரம்: 
முதலில் வெளியான 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.6,299. தற்போது வெளியாகியுள்ள 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.6,799. 
 
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 தள்ளுபடி வழங்கப்பட்டு 16 ஜிபி வேரியண்ட் போனை ரூ.5,699-க்கும், 32 ஜிபி போனை ரூ.6,199-க்கும் கிடைக்கும்.