தீபாவளிக்கு ஜியோ வழங்கும் புதிய பெரிய சலுகைகள்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 30 மே 2017 (14:28 IST)
ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை இந்த ஆண்டு தீபாவளி சீசனில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 
 
ஜியோ பைபர் சேவை அதிக வேகம் மற்றும் குறைந்த தரவு விலைகளுடன் பிராட்பேண்ட் தொழிற்துறையை கதிகலங்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. 
 
ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகையில் முதல் மூன்று மாதங்களுக்கு டேட்டா இலவசமாக வழங்கப்படும். பிராட்பேண்ட் சேவைகளின் விலை ரூ.500 முதல் துவங்குகிறது, இதில் 600 ஜிபி டேட்டா  மற்றும் 1000 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் மாதம் ரூ.2000 செலுத்த வேண்டும். 
 
மேலும், எச்டி டிவி, வீடியோ ஆன் டிமாண்ட், ஜியோ கிளவுட், லேண்ட்லைன் போன் சேவைகளை வழங்கவும் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :