1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2016 (16:24 IST)

செல்போனை சார்ஜ் செய்ய இனி மணிபர்ஸ் போதும்

நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


 

 
சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது.
 
தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும்.
 
இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கள் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போது இரண்டு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
கொஞ்சம் பெரிதாகவும், மணி பர்ஸுக்குள் மடித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை அமெரிக்காவில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.