புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (18:11 IST)

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா! – அமேசான் ஸ்பீக்கரிடம் ஐ லவ் யூ சொல்லும் இந்தியர்கள்!

அமேசானின் வாய்ஸ் கண்ட்ரோல் ஸ்பீக்கரான அலெக்சாவிடம் இந்தியர்கள் அதிகமாக ஐ லவ் யூ சொல்லியுள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய அலெக்ஸா வாய்ஸ் கண்ட்ரோல் ஸ்பீக்கர்கள் தற்போது இந்தியா முழுவதும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. நமக்கு பிடித்த பாடல்கள், தேவையான தகவல்கள் உள்ளிட்டவற்றை கேட்டால் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர்கள் நகரம் தாண்டி பல பகுதிகளிலும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 19,000 முறை அலெக்ஸா ஸ்பீக்கர்களிடம் ஐ லவ் யூ அலெக்ஸா என்ற வார்த்தையை உபயோகித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.