ரூ.9-க்கு 1 ஜிபி டேட்டா: ஜியோவை மிஞ்சும் ஆர்காம் அதிரடி!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 9 டிசம்பர் 2016 (09:59 IST)
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் இருந்தாலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சவாலான போட்டியை வழங்கி கொண்டுதான் இருக்கிறது. 

 
 
இண்டர்நெட் பேக் மூலமாக கடினமான போட்டியை உண்டாக்கும் முனைப்பில் ஆர்காம் நிறுவனம் ரூ.9/-க்கு இண்டர்நெட் பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
வழிமுறைகள்:
 
# ஆர்காம் எண்ணில் இந்த ஆஃபரை பெற, *129# என்ற எண்ணை டயல் செய்யவும்.
 
# டயல் செய்ததும், சலுகை பட்டியல் வரும். அதில் ஆப்ஷன் ரூ.9/-ஐ தேர்வு செய்யவும்.
 
# பின்னர், மற்றொரு பட்டியலை அடைய நேரிடும் அங்கு 'ரூ.9 = 1ஜிபி 2ஜி' என்ற தேர்வை நிகழ்த்த வேண்டும்.
 
# பின்னர் மைபைல் எண்ணை டைப் செய்து 'சென்ட்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 
# பேக் ஆக்டிவேட் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் பேலன்ஸில் இருந்து ரூ.9/- உடனடியாக கழித்துக்கொள்ளப்படும். 
 
குறிப்பு:
 
# ஆர்காம் 2ஜி, ப்ரீபெயிட் பயனர்களுக்கு மட்டுமே.  
 
# தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில், ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.


இதில் மேலும் படிக்கவும் :