வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (17:57 IST)

ரூ.200-க்கும் குறைவான விலையில் ஆண்டு முழுவதும் டேட்டா சேவை!!

கனடா நாட்டை சேர்ந்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டேட்டாவிண்ட் டெலிகாம் சேவைகளில் களமிறங்கியுள்ளது. 


 
 
மலிவு விலை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களை விற்பனை செய்து வரும் டேட்டாவிண்ட் விர்ச்சுவல் நெட்வொர்க் டெலிகாம் சேவைகளில் முதல் ஆறு மாதங்களில் ரூ.100 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
 
அதன் படி டேட்டா சேவைகளின் விலையை ஆண்டு முழுக்க ரூ.200-க்குள் வழங்க டேட்டாவிண்ட் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இதனால் மாதம் முழுக்க பயன்படுத்தப்படும் டேட்டா சேவைகளின் கட்டணம் ரூ.20 அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும் என தெரியப்படுத்தியுள்ளது.