ரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை??
ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை நிறுத்துமாறு டிராய் உத்தரவிட்டது. இதனால் ஜியொ அந்த அறிவிப்பை தற்கால்மாக நிறுத்துவதாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ டண் டணா டண் என அழைக்கப்படுகிறது.
இந்த புதிய சலுகையும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. இது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கும், இதுவரை ஜியோ ரிசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதேபோல், இந்த புதிய சலுகை அறிவிப்புக்கு முன்னர் சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரில் ரிசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை தெரிவித்துள்ளது.
அது என்னவெனில், ஜியோ பிரைமில் இணைந்து ரூ.303 மற்றும் அதற்கு மேல் ரிசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது 3 மாத வேலிடிட்டியை தற்போது 4 மாதமாக மாற்றி ஜுலை வரை சேவையை நீடித்துள்ளது.