திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (10:33 IST)

பிஎஸ்என்எல் புதிய மூன்று காம்போ ஆஃபர் அறிமுகம்!!

பிஎஸ்என்எல் புதிய மூன்று காம்போ ஆஃபர் அறிமுகம்!!
பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் பயனர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தாரார்களுக்கு பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. 


 
 
அந்த வகையில் பிஎஸ்என்எல் தற்போது ரூ.101, ரூ.169 மற்றும் ரூ.189 என்ற 3 புதிய காம்போ திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களும் 90 நாட்கள் செல்லுபடியாகும்.
 
101 வாடிக்கையாளர்களுக்கு ரூ.101 பேலன்ஸ் தொகை, நாள் ஒன்றிற்கு 500 எம்பி டேட்டாவை 7 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
ரூ.169 திட்டத்திற்கு பேலன்ஸ் தொகையுடன் 2 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது. ரூ.189 பேலன்ஸ் தொகையுடன் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது.
 
மேலும், ரூ.333, ரூ.349 மற்றும் ரூ.395 திட்டம் என பல சலுகைகளை வழங்குகிறது.