50 கோடி பேரின் தகவல்கள் திருட்டு: யாகூ நிறுவனம்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (16:12 IST)
யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 
யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள்  2014ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்க மத்திய புலானாய்வுத்துறை விசாரனை செய்து வருவதாக யாகூ தெரிவித்துள்ளது.
 
கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, கடவுச்சொல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 முதல் கடவுச் சொற்களை மாற்றாத நபர்கள் உடனடியாக அவற்றை மாற்றும்படியும் யாகூ கேட்டுக்கொண்டுள்ளது. 
 
மேலும் கடந்த ஜூலையில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யாகூ நிறுவனத்தை அமெரிக்காவின் தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான வெரிசான் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :