காதலி சர்ச்சை: கோலிக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம்
விதிமுறையை மீறி கோலி தனது காதலியை சந்தித்ததால் எழுந்துள்ள திடீர் சர்ச்சைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே 17 அன்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் -டெல்லி அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தை பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த இடைவேளையின் போது கோலி தனது காதலியான அனுஷ்கா சர்மா இருக்கும் இடத்துக்கு சென்று வெகு நேரம் பேசிகொண்டிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. விதிமுறைப்படி ஆட்டத்தின் கடைசி பந்து முடியும் வரை வீரர்கள் யாரிடமும் உரையாடக்கூடாது என்ற நடைமுறை உள்ளது.
கோலி இந்த செயல் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார் சென்றுள்ளது. இதனை விசாரித்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராஜீவ் சுக்லா, கோலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.