1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : சனி, 16 மே 2015 (08:08 IST)

ஐபிஎல்: கெயில், கோலி அதிரடி மற்றும் வார்னரின் பிழையால் பெங்களூரு அணி பரபரப்பு வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின்  52 ஆவது லீக் ஆட்டத்தில் கெயில், கோலி ஆகியோரின் அதிரடியான விளையாட்டாலும் வார்னர் செய்த தவறாலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது.


 

 
ஐபிஎல் கிரிக்கெட்டின்  52 ஆவது லீக் ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக, போட்டியானது 11 ஒவர் ஆட்டமாக குறைக்கப்பட்டு 10.40 மணிக்கு தொடங்கியது.
 
டாஸ் வென்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டகாரர்களாக வார்னரும், தவானும் களமிறங்கினார்கள்.
 
மிகவும் எதிர்பாக்கப்பட்ட தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய மோசஸ் ஹென்ரிக்ஸ் வார்னருடன் சேர்ந்து பெங்களூர் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர்.
 
மோசஸ் ஹென்ரிக்ஸ் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இறுதியில் அந்த அணி 11 ஒவரில் 135 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 57 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்தனர். 
 
இந்த போட்டியில், தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துவிடும் என்ற நிலையில், இந்த லீக்கில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது பெங்களூர் அணி.
 
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இதனால், பெங்களூர் அணிக்கு இது முக்கியமானது.
 
இந்நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஒவர்கள் குறைக்கபட்டு, பெங்களூர் அணி 6 ஒவரில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது.
 
கெயில் 10 பந்துகளில் 35 எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் டக் அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
மறுமுனையில் யாறும் சரியாக ஆடாத நிலையில் கோலி மட்டும் தொடர்ந்து போராடியப்படியே இருந்தார். கடைசி இரு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த ஒவரின் 5 பந்தை தூக்கி அடிதார்.
 
அந்த பந்து 6 ரன்களைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த நிலையில், எல்லை கோட்டு அருகே நின்றிருந்த வார்னர் அந்த பந்தை கேட்ச் பிடித்தார்.
 
ஆனால், எதிர்பாரத விதமாக கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் பவுண்டரி எல்லைக் கோட்டை மிதித்துவிட்டார். இதானால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது.
 
இதனால் பெங்களூர் அணி பரபரப்பான நிலையில் அதிஸ்ட்ட வசமாக வெற்றி பெற்றது. 44 ரன்கள் எடுத்த கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்பட்டது.