1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
  4. Today IPL match between Mumbai and Kolkatta teams

இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது? மும்பை - கொல்கத்தா மோதல்!

மும்பை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்ட நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது? என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.


 
 
2 வது தகுதி சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி, ஒரு அணிக்கு எதிராக அதிகமான தோல்விகளை சந்தித்து மும்பைக்கு எதிராகத்தான். 
 
மும்பை அணிக்கு எதிராக இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி அதில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முந்தைய தோல்விகளுக்கு பழிதீர்க்க கொல்கத்தா அணிக்கு சரியான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. 
 
இதை பயன்படுத்திக்கொள்வார்களா? அல்லது மும்பை அணியின் ராஜ்ஜியம் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இறுதிப்போட்டியில் புனே அணியுடன் மோதுவது யார்?: கொல்கத்தா, மும்பை அணிகள் இன்று பலப்பரிட்சை!