புதன், 4 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Sasikala

வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்...

வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்...

தேவையான பொருட்கள்:
 
மணத்தக்காளி - 1/2 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அலவு
கறிவேப்பிலை - சிறிதலவு
காய்ந்த மிளகாய் - 2
மிளகுட்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - அரை மூடி சாறு
உளுந்து - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை நறுக்கி வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி இவகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைதாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பிறகு மணத்தக்காளியை போட்டு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
 
அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து அதை அரைத்த கீரை கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். இதில் தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கி பரிமாறவும். சுவையான மணத்தக்காளி சூப் தயார்.