ஸ்டிராபெரி‌ச்சாறு

Mahalakshmi| Last Modified புதன், 5 ஆகஸ்ட் 2015 (15:48 IST)

தேவையான பொருட்கள்:

ஸ்டிராபெரி - கா‌ல் க‌ப்
ஆர‌ஞ்சு பழ‌ம் - 2
அன்னாசிப்பழம் - அரை க‌ப்
ஆப்பிள் - பா‌தி
திராட்சை - அல‌ங்க‌ரி‌க்க
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஆர‌ஞ்சு பழ‌த்தை தோ‌ல் உ‌ரி‌த்து, கொ‌ட்டைகளை அகற்‌றி‌வி‌ட வேண்டும். இதேபோல் அ‌ன்னா‌சி‌ப் பழ‌த்தையு‌ம் தோ‌ல் பகு‌தியை ‌‌நீ‌க்‌கி சிறு சிறு து‌ண்டுகளா‌க்‌க நறுக்கி கொ‌ள்ளு‌ங்க‌ள்.

ஸ்டிராபெரி பழ‌‌த்‌தி‌ன் கா‌ம்பை ‌நீ‌க்‌கி ‌வி‌ட்டு சுத்தமாக கழு‌வ வேண்டும். பின்னர் மி‌க்‌‌ஸி ஜா‌ரி‌ல் ‌ஸ்டிராபெ‌ர்‌ரி, ஆரஞ்சு, அன்னாசிப்பழம், ஆப்பிள் அனைத்தையும் போ‌ட்டு சர்க்கரை சேர்த்து அரை‌க்கவு‌ம்.

பழ‌க்கலவை ந‌ன்கு ம‌சி‌ந்தவுடன் அதனை ப‌ரிமாற வே‌ண்டிய ட‌ம்ள‌ர்க‌ளி‌ல் ஊ‌ற்‌றி ‌திரா‌ட்சைகளை‌க் கொ‌ண்டு அல‌ங்க‌ரி‌க்கவு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :