செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (13:12 IST)

அதிகமாக பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

Fruits
பழ வகைகள் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதேசமயம் அதிகமாக பழங்கள் சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை அளிப்பதல்ல. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்..


  • பழங்களில் விட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் என பல்வேறு வகையான சத்துக்களும் அடங்கியுள்ளது. தினம்தோறும் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
  • பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் பிரக்டோஸ் லிபோஜெனசிஸ் எனப்படும் செயல்பாடு கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கிறது.
  • இவ்வாறு அதிகரிக்கும் கொழுப்பினால் கல்லீரல் நோய்கள் உண்டாகும் ஆபத்து உள்ளது.
  • அதிக பழங்கள் சாப்பிடுவதால் அதிகரிக்கும் ப்ரக்டோஸ் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கிறது.
  • மேலும் அதிகமான பழங்கள் சாப்பிடுவதால் நீர்ச்சத்து அதிகரித்து வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • ஒரு சில பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏப்பம், வாயு தொல்லைகள் ஏற்படலாம்.
  • ஒரு நாளைக்கு இரண்டு கப் பழங்கள் என்பது அமெரிக்க உணவுத்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது. பழ சாலட்டுகள் போன்றவை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
  • பெரும்பாலும் ப்ரூட் சாலட்டுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதும், இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.