1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்களை போக்குமா காளான்...?

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. பொட்டாசியம் சத்து அதிகமுள்ள காளான் ரத்தத்தை சுத்தம் செய்து இதயத்தைக் காக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத்  தடுக்கிறது.
உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை கொடுத்து புற்றுநோய் செல்களை அதிகரிக்கவிடாமல் தடுக்கிறது.
 
காளானில் உள்ள சத்துக்கள் பலவகை நோய்களைத் தடுக்கவும், சிறந்த ஆரோக்கியத்தையும் தரவும் வல்லது. தினமும் காளான் சூப் அருந்துவதால்  பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை தவிர்க்கலாம்.
 
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் வாய்ந்தது காளான். மேலும், நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு செல்களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.
 
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் காளானில் நிறைந்துள்ளன. இதிலுள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.
 
தீராத காய்ச்சல் ஏற்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் பருகி வந்தால் விரைவில் உடல் எடை அதிகரிக்கும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
 
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. எளிதில் ஜீரணமாவதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை  கொண்டது.
 
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.