1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி

சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேத்துறது தான். ஆனா வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிறது. இதனால் உப்புகள் எல்லாம் சிறுநீரகத்தில் தங்குகிறது இதனால்தான் கல் உருவாகிறது.


 

 
நமது இரத்ததில் உள்ள உப்பு சத்து மற்றும் தேவையற்ற பாக்டீரியா நுழைவதை தடுக்கும். இங்கே மிகவும் எளிமையான கிடைக்ககூடிய கொத்தமல்லியை கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்.
 
சிறுநீரகத்தில் உள்ள கற்களை எவ்வாறு அகற்றுவது என்பதனை பார்ப்ப்போம்...
 
கொத்தமல்லி சாறு தயாரிக்கும் முறை:
 
ஒரு கப் அளவுள்ள கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான பாட்டிலில் ஊற்றி அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.
 
இதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இவ்வாறு தொடர்ந்து குடிக்கும்போது வித்தியாசத்தை நன்கு உணர முடியும்.
 
அனைவரும் அறிந்த கொத்தமல்லி சிறந்த மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யவதில் இதன் பங்கு அற்புதமானது. மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நீங்களும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.