வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (19:07 IST)

ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி: சீமான்

Seeman
உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தால் திரையுலகம் மகிழ்ச்சியாக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார் 
 
ரெட் ஜெயண்ட் நிறுவனம் படங்களை வாங்கி வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ள சீமான் தயாரிப்பாளர்களுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் எந்தவித இழப்பும் இல்லை என்று கூறியுள்ளார்
 
மேலும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தால் திரைத்துறை பாதுகாப்பாக உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார் 
 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படங்களை மிரட்டி வாங்குகிறது என்று ஒரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் சீமான் அந்நிறுவனத்திற்கு புகழாரம் சூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது