தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா....திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு
- ஹாட்ஸ்டார் மூலமாக இந்தியா வரும் டிஸ்னி ப்ளஸ்: சூப்பர்ஹீரோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
- பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் 2020: விருதுகளை அள்ளிய 1917
- காதலர் தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ஜோக்கர்: கடுப்பான டிசி ரசிகர்கள்!
- டொரேட்டோவை கொல்ல துரத்தும் ஜான்சினா: வாயை பிளக்க வைக்கும் ஃபாஸ்ட் சாகா ட்ரெய்லர்!
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஜோக்கர்: ஆஸ்கர் அப்டேட்ஸ்!
ஜோக்கர்
உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2020ம் ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் ஜோக்கர் பட நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ் மற்றும் லியார்னாடோ டிகாப்ரியோ உள்ளிட்ட நடிகர்கள் போட்டியில் இருந்தனர். எனினும் சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கரில் நடித்த ஜோக்கின் பீனிக்ஸுக்குதான் கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கின் பீனிக்ஸ் வென்றுள்ளார். இதற்கு முன்பு மூன்று முறை ஆஸ்கர் பரிந்துரையில் வந்தும் பீனிக்ஸ் விருது பெறவில்லை. நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டு முதல் முறையாக ஜோக்கின் பீனிக்ஸ் விருதை வென்றுள்ளார். மேலும் சிறந்த இசைக்கான பிரிவிலும் ஜோக்கர் விருதை தட்டி சென்றுள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட் ‘ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்’ படத்திற்காக பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதை பாரசைட் படம் வென்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
