1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (13:10 IST)

“ஆஸ்கரை ஓரமா வச்சிட்டு லவ்வரோடு பர்கர்” ஜோக்கர் நாயகனின் வைரல் புகைப்படம்

ஜோக்கர் திரைப்படத்தில் ஜோக்யுன் ஃபீனிக்ஸ்

ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற ஜோக்யுன் ஃபீனிக்ஸ், தான் வாங்கிய விருதை ஓரமாக வைத்து விட்டு தன் காதலியுடன் பர்கர் சாப்பிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜோக்யுன் ஃபீனிக்ஸ், ”ஜோக்கர்” கதாப்பாத்திரமாகவே அப்படத்தில் வாழ்ந்திருப்பார். கச்சிதமான அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஆஸ்கர் விருதை பெறுவார் என எதிர்பார்த்தனர்.

அதே போல் சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்யுன் ஃபீன்க்ஸ் பெற்றார். இந்நிலையில் ஜோக்யுன் ஃபீனிக்ஸ், தான் வாங்கிய ஆஸ்கர் விருதை கீழெ வைத்துவிட்டு தன் காதலி ரூனி மாராவுடன் பர்கர் சாப்பிட்டு கொண்டாட்டமாக இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.