வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (10:53 IST)

பிரபலமான பிடிஎஸ் இசைக்குழு உடைந்தது..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

BTS
உலக அளவில் பிரபலமான கொரிய இசை குழுவான பிடிஎஸ் தனித்தனியே பிரிவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு இசை வகைகள் உள்ள நிலையில் பல இசைக்குழுக்கள் பல்வேறு பாடல்களையும் பாடி உலகம் முழுவதும் புகழ்பெற்று வருகின்றனர். அந்த வகையில் கே-பாப் என்னும் கொரியன் பாப் வகை பாடல்களை பாடி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இசைக்குழு பிடிஎஸ் அல்லது பங்டன் பாய்ஸ் இசைக்குழு.

ஜின், சுகா, ஜே ஹோப், வி, ஜுங்கூக், அர்.எம், ஜிமின் ஆகிய 7 பேர் கொண்ட இந்த குழு உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். கடந்த 2010 தொடங்கிய இந்த இசைக்குழு பல்வேறு ஆல்பங்களையும் வெளியிட்டு புகழ் பெற்றனர். இந்நிலையில் தற்போது இந்த குழுவினர் தனித்தனியே பிரிந்து இனி செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது பிடிஎஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பீட்டில்ஸ், ஒன் டைரக்‌ஷன் உள்ளிட்ட பல இசைக்குழுக்கள் பிரபலமானது பிரிந்து காணாமல் போயின. பிடிஎஸ்க்கும் இந்த நிலை ஏற்படுமோ என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.