1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Avatar 2 box office collection In india

2 நாளில் 100 கோடி வசூலை தொட்ட அவதார் 2! – அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடிக்குமா?

Avatar 2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகியுள்ள அவதார் 2 படம் இரண்டே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்னதாக வெளியான அவதார் 2 உலகம் முழுவதும் பெரும் வசூலோடு வெற்றிகரமாக ஓடி வருகிறது. டிசம்பர் 16ம் தேதி தொடக்க நாளில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.40.50 கோடி ரூபாயை அவதார் 2 வசூல் செய்துள்ளது. மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தனது முதல் நாளிலேயே ரூ.53 கோடி வசூல் செய்திருந்தது.

இரண்டாம் நாளில் அவதார் 2 தகவல்களின்படி ரூ.46 கோடி வரை வசூல் செய்துள்ளது. இரண்டே நாட்களில் ரூ.100 கோடியை அவதார் 2 நெருங்கியுள்ள நிலையில் முதல் வார வசூல் ரூ.200 கோடியை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதாரின் முதல் வார வசூல் அவெஞ்சர்ஸ் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Edit By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அஜித்தின் துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல் ரிலீஸ்!