காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவரவேண்டும் ஏன்?

Sasikala|
இல்லற வாழ்க்கையில் இருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்துப் பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்ந்து தன் இல்வாழ்க்கைக் கடமையைச் செவ்வனே செய்து முடித்த பின்பு, காசி, ராமேஸ்வரம் என்று புனிதப் பயணம் மேற்கொள்வர்.

 
முக்தியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வர். இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர்.
 
கங்கையில் நீராடினால், நீராடியவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையில், கங்கையில் நீராடிவிட்டுப் புது மனிதனாக வெளிவரும் போது, மீண்டும் எதன் மீதாவது பற்று கொண்டு  விடக் கூடாது, எந்த ஒரு பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது, எதன் மீதும் எந்த ஒரு  ஆசையும் ஏற்பட்டு விடக் கூடாது. இனி இறைவன் ஒருவனையே மனதில் எப்போதும் தியானித்து இருக்க வேண்டும் என்கிற புதிய நம்பிக்கையில் பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு,  காசிக்குச் சென்றால், தங்களுடைய பழைய நிலையை விட்டுவிட்டு வர வேண்டும். 
 
எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும். பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து, எந்த ஒரு பொருளின்  மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே  அழிந்துவிடும். அவர்கள் வாழ்வும் சிறக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :