வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (15:51 IST)

பிரதோஷ வழிபாடு செய்யப்படுவதற்கான வரலாறு என்ன...?

Pradosha
என்றும் பிறப்பிறப்பில்லா பெருவாழ்வுக்கு அசுரர்கள், தேவர்கள் இருவரும் ஆசைப் பட்டார்கள். அதற்குத் தேவை அமிர்தம். அதைப் பெற, மேரு மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். அப்படிக் கடைந்தபோது வாசுகி விஷத்தை க் கக்க, பாற்கடலிலும் ஒருவகை விஷம் தோன்றியது.


இரண்டும் கலந்து ஆலகால விஷமானது. அதன் கடுமை தாங்க முடியாமல், தேவர்கள் கயிலாய மலைக்கு ஓடினார்கள் எம்பெருமான் ஈசன், தேவர்களை ஆற்றுப் படுத்தினார். தன் பிரியத்துக்கு உரிய தொண்டரான சுந்தரரை அழைத்து, ஆல காலத்தை திரட்டி எடுத்துவரச் சொன்னார்.

சுந்தரரும் எல்லா விஷத்தையும் ஒரு நாவற் பழம் போலத் திரட்டி, பாத்திரத்தில் வைத்து எடுத்து வந்தார். ஈசன் அதை வாங்கி ஆல காலத்திலிருந்து  தேவர்களைக் காப்பத ற்காக, அதை அப்படியே விழுங்கினார்.

விஷம், ஈசனுக்கு ஏதாவது துன்பம் விளை வித்துவிடுமோ என்கிற அச்சத்தில் அன்னை பார்வதி, ஈசனின் தொண்டை யைப்  பிடித்தார். ஆலகாலம், ஈசனின் உள்ளே இறங்காமல், கண்டத்திலேயே தங்கிவிட்டது. விஷம் உண்ட அயர்ச்சியில் அப்படியே படுத்துவிட்டார் இறைவன்.

பார்வதியும் தேவர்களும் பதை பதைத்துப் போனார்கள். ஈசன் தன் திருவிளை யாடலைத்  தொடர்ந்தார். களைப்பு நீங்கி எழுந்தார். டமரு கம் ஒலிக்க, சூலாயுதத் தைச் சுழற்றி ஆடத் தொடங்கினார்..  தேவர்கள் மட்டுமல்லாது,  அனைத்து ஜீவராசிகளும் காணத் துடிக்கும் அற்புதத் தாண்டவம் அது.

இறைவனின் தாண்டவம் பலவிதம், ஊழிக் காலம் முடியும்போது நடைபெறும் ஊழிக் கூத்து; அந்தி நேரத்தில் ஆடும் ஆட்டம் என எத்தனையோ வகை. ஈசனின் தாண்டவம் என்பது சூட்சுமமானது.