1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2015 (14:22 IST)

வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை அறிவோம்

வள்ளலார் ஆன்மிக வழிகாட்டியாகவும், குருவாகவும் விளங்கினார். மேலும் ’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்’ என்று கூறுவதனால், அவரின் நற்பண்பு வெளிப்படுகிறது.


 


வள்ளலார் பிறப்பு:
வள்ளலார் 1823-ல் சிதம்பரம் தலுக்காவில்  உள்ள மருதூரில், வேளாளர் குடும்பத்தில் எளிய சூழலில் பிறந்தார். சிறுவனாக இருக்கும் போதே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரின் பாடல்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருத்தணி கோயில்களில் எழுந்தருளியுள்ள  (முருகன்) இறைவனின் புகழைப் பாடுபவை. 
 
இவையே அவரை ஆன்மிக வழிகாட்டியாகவும், குருவாகவும் ஆக்கின. தென்னாட்டிலுள்ள புகழ் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செய்தபின் இறுதியாகப் பார்வதிபுரத்திற்கு அடுத்த கருங்குழியில் தங்கினார். அவருடைய புகழ் உச்சத்திலிருந்ததென்பது மிகவும் உண்மை.
 
1827-ல் பார்வதிபுரத்தை அடுத்த வடலூரில் தனித் தன்மை வாய்ந்த எண்கோண வடிவமுள்ள சபை உருண்டைக் கூரையுடன் அன்பர்களின் நன்கொடைகளைக் கொண்டு அவரால் கட்டப்பட்டது.

அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அங்கிருந்து பார்த்தால் சிதம்பரம் நடராசர் கோயிலின் நான்கு பெரிய கோபுரங்களும் தெரிவதே என்று சொல்லப்படுகிறது. அது சாதாரணக் கோயிலல்ல. அதன் வழிபாட்டு முறைகள் மற்ற கோயில்களிலிருந்து வேறு பட்டவை.
 
இறந்தவர்கள் திரும்ப எழுந்து வருவார்கள் என்றும் இறந்தாரை எரிப்பதிலும் புகைப்பதே சிறந்ததென்றும் இராமலிங்க பரதேசி வலுவாக உபதேசித்தார்.
 
1874-ல் கருங்குழியை அடுத்த மேட்டுக்குப்பத்தில் தாம் எப்போதும் சமாதி கூடும் அறைக்குள் புகுந்து, சில காலம் திறந்து பார்க்க்க வேண்டாமெனச் சீடர்களுக்குக் கூறி தாழிட்டுக் கொண்டார். அதன் பின் அவர் காணப்படவில்லை. அவ்வறை இன்னும் பூட்டப்பட்டே உள்ளது.
 
அவர் கடவுளோடு ஐக்கியமாகி விட்டார் என்று அவர் மீது நம்பிக்கையுடையோர் கருதுகின்றனர். சமய மறுமலர்ச்சி இப்போதும் உண்டாகலாம் என்பதற்கு இவரது வரலாறே சிறந்த எடுத்து காட்டாகும்.