செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (18:36 IST)

திருமண தடை நீங்க செவ்வாய்கிழமை முருகனுக்கு விரதம்..!

Lord Murugan
திருமணத்தடை நீங்க செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு விரதம் இருந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
செவ்வாய்க்கு அதிபதி முருகன் என்பதால் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் நிகழும் என்றும் குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் கண்டிப்பாக உடனடியாக திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. 
 
செவ்வாய் கிரகத்துக்குரிய அதிதேவதை முருகன் என்றும் செவ்வாய் தலங்களான வைத்தீஸ்வரன் கோவில் பழனி ஆகியவை கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமண தடை மட்டும் இன்றி அனைத்து விதமான தடையும் நீங்கும் என்றும் இதை வழக்கமாக செய்ய வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran