1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (19:26 IST)

அனைத்து தோஷங்களையும் தீர்க்க இந்த ஒரு கோயிலுக்கு சென்றால் போதும்!

temple
அனைத்து தோஷங்களையும் தீர்க்க இந்த ஒரு கோயிலுக்கு சென்றால் போதும்!
 ஒவ்வொரு தோஷங்களுக்கும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் அனைத்து தோஷங்களையும் தீர்க்க திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமாளம் மகாகாளநாதர் கோவிலுக்கு சென்றால் போதும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
திருமண தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் இந்த கோவிலுக்கு சென்றால் நீங்கிவிடும் குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் விரைவில் குழந்தை பேறு பெறலாம் என்றும் காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கையாக உள்ளது
 
இந்த கோயிலின் ராஜகோபுரம் பார்ப்பதற்கு அம்சமாக இருக்கும் என்றும் கோபுரத்தை வழிபட்டு விட்டு அதன் பின்னர் இறைவன் சன்னதிக்கு எதிரில் உள்ள பலி பீடம் நந்தி பீடம் ஆகிவற்றை வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
அழகிய சிற்பங்கள் மற்றும் கர்ப்பகிரகத்தில் மூலவர் நாகநாதர் பெருமாள் சிவலிங்க திருமேனியாக எழுதி உள்ளார் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்து உள்ளனர். எனவே திருவாரூர் மாவட்டத்திற்கு செல்பவர்கள் இந்த கோவிலுக்கு தவறாமல் சென்று வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் 
 
Edited by Siva