வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (20:33 IST)

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேரோட்டம் எப்போது? தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு

suseendhram
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேரோட்டம் எப்போது? தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெறும் என்பதும் இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மார்கழித் திருவிழா டிசம்பர் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்றும் ஜனவரி 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறும் என்றும் அதே போல் அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இதனை அடுத்து இந்த ஆண்டு தேரோட்ட நிகழ்ச்சியை காண அதே பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran