வியாழன், 30 மார்ச் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2023 (18:57 IST)

மாங்காடு காமாட்சி அம்மன் தெப்பத்திருவிழா: குவிந்த பக்தர்கள்..!

kamatchi
மாங்காடு காமாட்சி அம்மன் தெப்பத்திருவிழா: குவிந்த பக்தர்கள்..!
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று தெப்ப திருவிழா நடைபெற்றதை அடுத்து ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
 
ஒவ்வொரு ஆண்டும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தைப்பூச தினத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. 
 
இந்த திருவிழாவில் காமாட்சி அம்மன் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்தனர். இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva