திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:19 IST)

நாளை மாசி மாத சஷ்டி விரதம்... முருகனுக்கு விரதம் இருந்தால் கோடி நன்மை..!

Lord Murugan
நாளை மாசி மாத சஷ்டி விரதத்தை அடுத்து முருகனுக்கு விரதம் இருந்தால் கோடி நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முருகப்பெருமானை தரிசிக்க ஒரு சில நாட்கள் சிறப்பாக இருக்கும் என்பது அதில் ஒன்று சஷ்டி விரத நாள் என்பது தெரிந்ததே. ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி விரதம் வரும் நிலையில் மாசி மாத சஷ்டி விரத தினம் வருவதை அடுத்து நாளை முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் எலுமிச்சம் சாதம் வைத்து வழிபட்டால் வீட்டில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்றும் தம்பதிகள் இடையே ஒற்றுமை பலப்படும் என்று கூறப்படுகிறது.
 
நாளை விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசித்தால் கோடி கணக்கான பலன்களை பெறலாம் என்றும் இனிதே வாழலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
நாளைய வரத நாளை முருகனை நினைத்து காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றினால் ஏராளமான பலன்களை கிடைக்கும் என்றும் தெரிகிறது.
 
Edited by Mahendran