1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (19:09 IST)

இந்த கோவிலின் குளத்தில் மூழ்கி எழுந்தால் குழந்தை பேறு கிடைக்கும்..!

குழந்தை பேறு இல்லாதவர்கள் திருவெண்காடு கோவிலில் உள்ள குளத்தில் மூழ்கி எழுந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறப்படுவதுண்டு  
 
திருவெண்காடு பகுதியில் உள்ள கோவில் குளத்தில் மூழ்கி குழந்தை பேறு பெறுபவர்கள் ஏராளம் என்றும் மக்கள் இந்த திருக்குளங்களில் மூழ்கி எழுந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. 
 
மும்மூர்த்தி தீர்த்தம், மூவிலைச் சூலதீர்த்தம், முக்குள தீர்த்தம், அகர முதலான மூவெழுத்துத் தீர்த்தம், தன்ம தீர்த்தம், தானதீர்த்தம் என்று பல பெயர்களால் இந்த குளம் அழைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த குளத்தின் பெருமை குறித்து திருஞானசம்பந்தர் தனது பாடல்களில் பாடியுள்ளார். எனவே குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து இந்த குளத்தில் மூழ்கிகளை எழுந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran