துயரங்கள் தீர்க்கும் திருத்தணி முருகன்.. தேவர்கள் அச்சம் தணிந்த தலம்..!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றால் துயரங்கள் தீரும் என்றும் தேவர்கள் அச்சம் தணிந்த தலம் இது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. முருகப்பெருமான் தேவர்களின் துயரை நீக்கும் பொருட்டு சூரபத்மநாதன் செய்த போர் செய்தது இந்த இடத்தில் தான்.
மேலும் வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் இந்த தலத்தில் அமைந்தது. தணிந்து அமர்ந்த தலம் என்பதால் திருத்தணிகை என்ற பெயர் பெற்றது.
தேவர்கள் அச்சம் தணிந்த இடமான திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தால் அனைத்து துயரங்களும் தீரும் என்றும் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றை தணிக்கும் இடம் என்பதால் தணிகை என்ற பெயர் அமைந்ததாகவும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran