தைப்பூச விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா?
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று முருக பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தைப்பூச தினத்தில் விரதம் இருந்தால் என்னென்ன மகிமைகள் ஏற்படும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து திருநீர் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு நாம் முருகனை வணங்கி மனதார விரதம் இருக்க வேண்டும்
காலை மாலை என இரு வேலைகளில் கோவிலுக்கு சென்று விரதம் இருந்தால் அன்னை பார்வதி தேவி நேரடியாக முருகனுக்கு ஞானவேல் வழங்கியது போல் பக்தர்களுக்கு ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தைப்பூச திருநாளில் முருகனுக்கு உரிய வேல் வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva