வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (23:32 IST)

விவேகானந்தரின் ஆன்மிக தத்துவங்கள்

கோழைகளுடனோ அல்லது பொருளற்ற அரசியலுடனோ எந்தவிதத் தொடர்பும் எனக்கு இல்லை. கடவுளும் உண்மையும் தான் உலகிலுள்ள ஒரே அரசியல். மற்றவை எல்லாம் வெறும் குப்பை.
 
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.
 
மரணம் என்பது நமக்கு உறுதியாக ஒருநாள் வந்தே தீரும். அதற்குள் சிறிதளவாவது பிறருக்கு பயன்பட்டு அழிந்து போவது நல்லது.
 
அன்பின் மூலமாகச் செயல்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
 
மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்றுவிதமான இயல்புகளால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். இதில் தெய்வீக  இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும். 
 
மரணம் என்பது மிக உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரைத் தியாகம் செய்வது மேலானது.
 
முடிவான லட்சியம் என்ற ஒன்று இல்லாமல் போனால், நாம் ஏன் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்? இன்பமாக இருப்பதுதான் மக்களின் லட்சியம் என்றால், நாம் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்ட மற்றவர்களை ஏன் துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாது? அப்படிச்  செய்வதில் இருந்து நம்மை தடுத்து நிறுத்துவதே ஒழுக்கம்தான்