சுவாமி விவேகானந்தரின் அற்புத பொன்மொழிகள்...!!
சிறிய எறும்பும், வானுலக தேவ தூதனும் என்னைப் பொறுத்த வரை ஒன்று தான். ஒவ்வொன்றும் அதனதன் நிலையில் பெருமை உள்ளதே.
தோல்வியைக் கண்டு துவளாதே. வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பமுடன் ஏற்றுக் கொள்.
எப்போதும் இனிமையும், புன்னகையும் கொண்டவனாக இரு. அதுவே உன்னைக் கடவுளின் அருகில் கொண்டு சேர்க்கும்.
கோபத்திற்கு அடிமையாக இருப்பவன் உண்மையான சுதந்திரத்தை வாழ்வில் உணர முடியாது.
பிறருடைய பாராட்டு, பழிச்சொல் குறித்து சிந்திக்கத் தொடங்கினால் உன்னால் சாதிக்க முடியாது.
நம்பிக்கை, நேர்மை, பக்தி இருக்கும் வரை உன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. சென்றதை எண்ணிக் கவலைப்படாதே. எதிர்காலத்தை எண்ணி மயங்காதே. நிகழ்காலத்தில் தீவிர கவனம் செலுத்து.
சுயநலம் இல்லாத அனைத்தும், நல்லொழுக்கம். சிறிது கலந்து விட்டாலும் தீயொழுக்கமாகி விடும்.
மனதால் விரிந்திடு. வளர்ச்சியடைவதே உயிர் வாழ்வதன் ஒரே அடையாளம் என்பதை நினைவில் கொள்.
உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதை பின்தொடர்ந்திடு. கோழையாகவும், கபடதாரியாகவும் இருப்பது கூடாது.