வெள்ளி கிழமையில் பெண்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் !!

Friday - Spiritual
Sasikala|
பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலையில் எழுந்து குளித்து மங்களத்தின் சின்னமான குங்குமத்தை நெற்றியில் இடவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பார்க்கும் அனைவருக்கும் லட்சுமியின் அருள் கிடைக்கும், அதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

பின் வாசலில் நீர் தெளித்து அரிசி மாவினால் கோலமிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின் தண்ணீரில் மஞ்சள் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பது ஏன் என்றால் வீட்டில் ஏதேனும் கெட்ட சக்திகளின் ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை விரட்டி நமக்கு நன்மை பயக்கும்.
 
பின்னர் பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூ வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும்.
 
5 முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், தாமரைப் பூக்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
 
சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்
வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி துர்கை அம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடியாக திருமணம் நடைபெறும்.


இதில் மேலும் படிக்கவும் :