1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (23:57 IST)

பணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்கசில நம்பிக்கைகள்....!

ஒருவருக்கு திடீரென எதிர்பாராத பண வரவை அதிகரிக்க கூடிய சில விஷயங்களை பற்றி பார்ப்போம். பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வீட்டில் கோமியத்தை தெளிக்க வேண்டும். இதை தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வந்தால் தரித்திரம் விலகி பணம் வரும்.
 
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை அடுத்த நாளில் பறவைக்கோ அல்லது பசுவிற்கு உணவாக அளித்திட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர பணத் தடை நீங்கி செல்வம் அதிகரிக்கும்.
 
பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பண வரவு அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர தரித்திரம் நம்மை விட்டு விலகும்.
 
பாசிப் பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாக கட்டி உறங்கும் போது தலைக்கு கீழே வைத்து விட்டு பின்னர் மறு நாள் அதை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து கொண்டு மூடி ஓடுகின்ற நீரில் விட வேண்டும். இப்படி செய்தால் நமது பணப் பிரச்சனையும் ஓடி விடும்.