1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் பணம் அதிகரிக்க செய்யவேண்டியது என்ன தெரியுமா...?

ஒவ்வொருவரின் வீட்டிலும் பணம் அதிகரிக்க, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிறிதளவு கல் உப்பு வாங்கி வர, செல்வ செழிப்பு அதிகரிக்கும். 

செல்வ செழிப்பு அதிகரிக்கும் வீடுகளில் உள்ளே நுழையும் போது துர்நாற்றம் இல்லாமல், நறுமணம் நிறைந்திருக்கும்.
 
நீங்கள் புதிதாக செய்யக் கூடிய நிகழ்வுகளில் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை உப்பு (மகாலஷ்மியின் அம்சம்), மஞ்சள் (அம்மனின் அம்சம்), ஒரு குடம் நிறைய தண்ணீர் மற்றும் நீங்கள் வணங்கும் தெய்வங்களின் படம் ஆகியனவாகும்.
 
வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் வீடுகளை சுத்தம் செய்யும் வழக்கம் கொண்டவர்களிடம் செல்வம் நிலைத்து நிற்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு நிறைந்திருக்கும் இடங்களில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
 
எந்த ஒரு வீட்டில் ருத்ராட்சம், அருட் பிரசாதமான எலுமிச்சை பழம், மஞ்சள் காப்பு, குங்குமம் போன்றவைகள் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கப்படுகிறதோ! அங்கே நிம்மதியும், செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.