1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (23:48 IST)

பூஜை அறையில் வைக்க கூடாத சாமி படங்கள் ...

பூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான், நமது வாழ்க்கையின் தரமும் உயரும். எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும், எந்த உருவங்களை வைக்கக் கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி  பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும்.
 
சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில்  வைக்க கூடாது.
 
கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவனம் கட்டிய முருக பெருமானின் படத்தை  படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது. கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.
 
தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை  உள்ள உருவம், தவம் செய்யும் மற்றும் தலைவிரிகோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. இது  மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில், வைத்து பூஜை  செய்யக் கூடாது.
 
பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்  திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்  தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கலாம்.