1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified வியாழன், 1 செப்டம்பர் 2022 (11:17 IST)

சகல செளபாக்கியங்களையும் தரும் வாராஹி வழிபாடு !!

Varahi
மாதம் தோறும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி அன்னை ஸ்ரீ வாராஹி வழிபாட்டிற்கு சிறப்பான நாள். இந்த நாட்களில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி அன்னையின் அருளை எளிதில் பெற மிகச்சிறந்த நாள். இன்று வாராஹி வழிபாடு சகல செளபாக்கியங்களையும் தரும்.


சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னியாகத் திகழ்பவள் வராஹி அம்மன். பஞ்சமித் தாய் இவள். அதாவது வாழ்வின் பஞ்சங்களைத் துரத்துபவள். ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதியும் வராஹி வழிபாட்டுக்கு உரிய நாள்.

அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள்தான் சப்த கன்னியர் என்கிறது புராணம். பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவளும் மகாசக்தி மிக்கவளாகவும் திகழ்பவளே வராஹியம்மன்.

மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். வராகம் என்றால் பன்றி. கோபத்தின் உச்சம் தொடுபவள் இவள். அதேசமயம், தன்னை நாடி வந்தவர்களுக்கு பாசக்காரியும் கூட. அன்பிலும், கருணையிலும், ஆதரித்து அருளுவதிலும் மழைக்கு நிகரானவள் என்று போற்றுகிறது புராணம்.

நம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வராஹி அம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் போதும். எதிரிகளை விரட்டிவிடுவாள். எதிர்ப்புகளை பொடிப்பொடியாக்கிவிடுவாள். ஆனானப்பட்ட மகாசக்தியின் போர்ப் படைத்தளபதி அல்லவா வராஹி தேவி.

பஞ்சமியில் வாராஹியை விளக்கேற்றி வழிபடுங்கள். நம் பஞ்சத்தையெல்லாம் போக்குவாள். நம் வாழ்வை உயரச் செய்வாள். பூஜைக்குறிய நேரம் இரவு எட்டு மணிக்கு மேல். வீட்டில் வாராஹி விக்ரஹம் அல்லது படம் இல்லை என்றாலும் ஒரு நெய் தீபம் ஏற்றி அதையே அன்னை வாராஹியாக பாவித்து வழிபடலாம். கணபதி, குரு மற்றும் குல தெய்வ  வழிபாட்டுடன் பூஜையை முறைப்படி துவங்க வேண்டும்.