1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. pushpa yagam in tirupathi govindaraja samy temple

3 டன் மலர்களால் புஷ்ப யாகம்: திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

புஷ்ப யாகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ வைபவம் நடைபெற்று வரும் நிலையில் இதில் மூன்று டன் மலர்களால் புஷ்ப யாகம் செய்யப்பட்டதை அடுத்து இதை காண பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 
நேற்று கோவிந்தராஜ சாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த இந்த புஷ்ப யாகம் 4 மணி நேரம் வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
12 வகையிலான மூன்று டன் புஷ்பங்கள் ஸ்ரீதேவி பூதேவி கோவிந்தராஜசாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கண்கொள்ளா காட்சியை காணுவதற்காக நாடெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர் இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி! இன்றைய ராசிபலன் (27-06-2023)!