1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

குழந்தைகளுக்கு திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் முறைகள்...!

கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை  பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை  ஏற்படுத்தலாம்.

 
குழந்தைகளுக்கு திருஷ்டி
 
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும்செய்யக்கூடிய ஒன்று. நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும்  மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும்.
 
சாப்பிடாம அடம் பிடிக்கிறதுக்கு கண்திருஷ்டி கூட காரணமா இருக்கும்னு சொல்லுவாங்க! ஒருகைப்பிடி உப்பை எடுத்து  கையை நல்லா மூடிகிட்டு தாய் மடியில குழந்தையை இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா  மூணு தடவையும்சுத்தி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுவாங்க. தண்ணியில  உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.
 
கொஞ்சம் பெரிதான குழந்தைக்கு, சாதம் வடிச்சி சிகப்பு மஞ்சள் வெள்ளை கலர்கள்ல அஞ்சு உருண்டைகள்செஞ்சி ஞாயிற்று கிழமைகளில் மதிய வேளை 12 மணிக்கு இதே மாதிரி சுத்தி வெவ்வேறு திசைகளில் எறிந்து விடலாம். அப்புறம் குழந்தையோட கை கால்களை கழுவிட்டு நாமும் கழுவிகிட்டு உள்ள வரலாம். இந்த பரிகாரம் திருஷ்டி எந்த திசையில் இருந்தாலும் விலகிப்  போகசெய்யும்.
 
குழந்தைங்களுக்கு சோறூஊட்டிய பின் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றி  போடலாம். சாப்பிட போகும் முன் ஒரு உருண்டை சாதம் தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட  செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே.
 
குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும் அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம்.
 
கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால் குழந்தை கீழே விழும் சமயம் நீங்கள் அங்கிருந்தால் கீழேகிடக்கும் செங்கள் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மும்முறை சுற்றி தூக்கி போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம்.
 
இதைவிட எளிதான ஒரு முறை கற்பூரத்தை ஒரு தட்டில் ஏற்றி குழந்தைக்கு சுற்றி வாசலில் ஓரமாக போடுதல் இதனால்  கற்பூரம் கரைவது போல திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.
 
இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு  குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில்போடுவார்கள். இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரம்.