செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:18 IST)

அனைத்து நோய்களையும் உடனே தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில்..! சென்னையில் தான் உள்ளது..!

சென்னையில் உள்ள இந்த கோயிலுக்கு சென்று வந்தால் அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்று ஐதீகமாக உள்ளது. அந்த கோயில் தான் திருவான்மியூர் அருகில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சிவபெருமான்  வீற்றிருக்கிறார்.  அகத்திய முனிவருக்கு மருத்துவ முறைகளை உபதேசித்ததால் மருந்தீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  
 
இங்கு உள்ள சிவபெருமானுக்கு தினமும் பூஜை செய்யப்படுவதாகவும்  மருந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது. 
 
அதேபோல் இந்த கோவிலில் வழங்கப்படும் விபூதியை உண்பதால் தீராத நோய்கள் தீர்ந்து விடும் என்றும் இந்த கோவிலில் உள்ள வன்னி மரத்தை சுற்றி வந்தால் அனைத்து பாவங்களும் நீங்கிவிடும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran