வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (18:25 IST)

நம்மூரில் நடக்கும் நவராத்திரி தான் வடமாநிலங்களில் துர்கா பூஜை..!

Goddess Durga 1
தமிழகத்தில் ஒன்பது நாட்கள் நடக்கும் நவராத்திரி திருவிழா தான் வட மாநிலங்களில் துர்கா பூஜை என சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
 
மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில்  நாம் கொண்டாடும் நவராத்திரியை துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்  
 
துர்கா பூஜையின் போது ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் அமைக்கப்பட்டு துர்க்கை அம்மன் சிலை நிறுவப்படும்.  மேலும் மாலை நேரத்தில் மண் விளக்குகளால் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள். 
 
அது மட்டும் இன்றி  பத்தாம் நாளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்கா சிலையை நம் ஊரில் பிள்ளையார் சிலையை கரைப்பது போல் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைப்பார்கள்.
 
Edited by Mahendran