1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (16:14 IST)

துணிவு வெற்றியை அடுத்து சபரிமலை தரிசனத்துக்குக் கிளம்பிய இயக்குனர் வினோத்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. துள்ளலான அஜித் மற்றும் படத்தின் பரபர திரைக்கதை என ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ள ஹெச் வினோத், அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ள அவர், எந்த படத்தை முதலில் தொடங்குவார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் இப்போது துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்த படத்தின் இயக்குனர் வினோத் சபரிமலைக்கு மாலையணிந்து யாத்திரைக்கு சென்றுள்ளார். இது சம்மந்தமான வீடியோவை வினோத்தின் நண்பரான இயக்குனர் இரா சரவணன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.