1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

சனி பகவான் ஈஸ்வரனை பிடித்து சனீஸ்வரன் ஆனது எவ்வாறு.....

சிவனின் ஆணைக்கு இணங்க, சிவன்  இட்ட கட்டளையை நிறைவேற்றும் காலம் வந்தது. அவர் கூறிய வழியாக அந்த குறிப்பிட்ட காலத்தில் சனி புறப்பட்டு சென்றார். அது என்ன வழி தெரியுமா?. தேவலோகத்தை கடந்து செல்லும் கைலாய வழி. 



சனி தேவலோகத்தை நோக்கி வந்தார். இதை கண்ட தேவர்கள் அனைவரும், அய்யய்யோ! சனி அல்லவா நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இன்று நம் கூட்டத்தில் யாரோ ஒருவர் கதை முடிந்தது என்று பதறியபடி கிடைத்த மறைவிடங்களில் பதுங்க ஆரம்பித்தனர். சிலர் தேவலோகத்தை காலி செய்து பல வேடங்களில் பூலோ கம், பாதாள லோகம் சென்று ஓடி ஒளிந்து கொண்டனர். ஆனால் சனியோ தேவலோகத்தை கடந்து சென்று கொண்டிருந்தார். 
 
இதனால் தேவர்கள் அனைவரும் மன நிம்மதி அடைந்து, அப்பாடா! தப்பித்தோம்டா சாமி! என்று பெருமூச்சு விட்டனர். பின்னர், சரி சனி எங்குதான் செல்கிறார் என்று தேவர்களுக்கு எண்ணம் தோன்றியது. அதனை பார்க்கும் ஆவலில் சனியை அனைவரும் பின் தொடர்ந்தனர். அப்போது நேராக கயிலாயத்தை அடைந்தார் சனி. அங்கு அமர்ந்திருந்த சிவபெருமானை பிடிக்க முயன்றார். அதனை கண்டதும் சிவபெருமான் ஓட தொடங்கினார். 
 
சனி ஈஸ்வரர் ஆனது...
 
இதை கண்ட தேவர்கள் அனைவரும் உடல் நடுங்கிப் போனார்கள். அனைவரது புருவமும் மேல் நோக்கி வில்லாக வளைந்தது. இங்கு என்ன நடக்கிறது. சிவன் ஓடு கிறார், சனி அவரை துரத்திக் கொண்டு செல்கிறார். சனியிடம் இருந்து சிவன் தப்பிக்க, விஷ்ணுவும் சனி பார்வை படாத இடம் காண்பித்து உதவி புரிகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சனி பகவான் சிவபெருமானை பிடித்து விட்டார். 
 
தேவர்களுக்கு மூர்ச்சையே ஏற்பட்டு விடும் போல் ஆகி விட்டது. ஏற்கனவே சனியின் பலம் அனைவரும் அறிந்ததுதான். இப்போது சிவனையே பிடித்து விட்டார். இனி சனியிடம் வைத்துக் கொண்டால் அவ்வளவுதான் என்று சனியிடம் தேவர்கள் அனைவரும் சரணாகதி அடைந்தனர். மேலும் சிவபெருமானை, சனி பிடித்த செய்தி அனைத்து லோகத்திற்கும் சென்று சேர்ந்தது. அதே சமயம், உன் கடமை தவறாமல், என்னையே பிடித்தமையால் உன் பொறுப்பை பாராட்டி என் பெயரையே உனக்கு பட்டமாக தருகிறேன். இனி நீ எல்லோராலும் சனி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுவாய் என்று சனியை வாழ்த்தி மறைந்தார் சிவபெருமான்.