திங்கள், 17 நவம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (18:45 IST)

விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில்: 'பிராது கட்டுதல்' எனும் புதுமையான நேர்த்திக்கடன்

விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில்: 'பிராது கட்டுதல்' எனும் புதுமையான நேர்த்திக்கடன்
விருத்தாச்சலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் ஆலயத்தில், 'பிராது கட்டுதல்' என்ற ஒரு தனித்துவமான வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது. 
 
பக்தர்கள் தங்கள் குறைகள் அல்லது கோரிக்கைகளை ஒரு மனுவாக எழுதி, அதை ஆலய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த மனுவில், தங்கள் பெயர், ஊர் மற்றும் பிற விவரங்களுடன் கோரிக்கையையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பின்னர், அந்த மனு கொளஞ்சியப்பரின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டு, விபூதியுடன் ஒரு பொட்டலமாக பக்தர்களிடம் வழங்கப்படும். இந்த பொட்டலம், ஆலயத்தில் உள்ள முனியப்பர் சன்னிதிக்கு முன் இருக்கும் வேல் அல்லது சூலத்தில் கட்டப்படுகிறது.
 
இந்த வழிபாட்டிற்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் வரும் இடத்திற்கும் கோவிலுக்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில், ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் இந்தக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர். நியாயமான கோரிக்கைகளை முருகப்பெருமான் மூன்று நாட்கள், மூன்று வாரங்கள் அல்லது மூன்று மாதங்களில் நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
 
கோரிக்கை நிறைவேறிய பிறகு, பக்தர்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து, ''எனது பிராது கட்டுதல் வேண்டுதல் நிறைவேறியதால், அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்'' என்று கூறி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்கின்றனர். 
 
Edited by Mahendran