1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (19:35 IST)

கல்யாண வரம் தரும் உறையூர் கமலவல்லித் தாயார் கோவில்..!

kamalavalli
கல்யாண வரம் தரும் உறையூர் கமலவல்லித் தாயார் கோவில்..!
திருமணத்திற்கு வரன் சரியாக அமையவில்லை என்று வருத்தத்துடன் இருப்பவர்கள் உறையூர் கமலவல்லி தாயார் கோவிலுக்கு சென்று வழிபட்டால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. திருச்சி உறையூர் அருகே அழகுடன் அமைந்திருக்கும் கோவில் கமலவல்லி நாச்சியார் கோயில். இந்த கோயிலில் உரிய வயது வந்தும் திருமணமாகவில்லை என்று கலங்கி தவிப்பவர்கள் சென்று வணங்கினால் கமலவல்லி தாயார் உடனடியாக கல்யாண வரத்தை தந்த அருள்கிறார் என்று அந்த பகுதியில் உள்ள ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வாரமும் கமலவல்லி தாயாருக்கு விளக்கு ஏற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்தால் கல்யாண தடை நீங்கும் என்றும் உடனடியாக திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. 
 
கமலவல்லி தாயாரின் மகிமையை அறிந்து தமிழகத்தின் பல பகுதியில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு குவிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran