1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

ராகுகாலத்தில் நல்லகாரியம் செய்யலாமா? நன்மை தருமா?

ஒவ்வொருவர் குடும்பத்திலும் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டர், பஞ்சாங்கம் அல்லது குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்போம்.
 

 
பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள்,புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம்,சாந்திகள் போன்ற  நற்காரியங்களுக்கு விசேஷமானவை.
 
அன்றாடம் செய்து வரும் பணிகளுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்கத் தேவையில்லை. புதிதாக ஒரு முயற்சியில்  இறங்கும்போது நல்லநேரம் பார்த்துச் செய்வது நல்லது. சில நேரங்களில் தவிர்க்க முடியாத பட்சத்தில், ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது விஷ்ணுதுர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொண்டு  காரியத்தைத் தொடங்கலாம்.
 
அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சுமங்கலிப் பெண்ணின் கையால் ஒரு குவளை சுத்தமான தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு செயலில் இறங்கினால் எடுத்த பணி வெற்றிகரமாக நடந்தேறும். செயலில் வெற்றி கண்டதும் அருகில் உள்ள ஆலயத்தில்  துர்க்கைக்கு விளக்கேற்ற வேண்டியது அவசியம்.