1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

இறைவழிபாட்டில் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன...?

இறைவழிபாட்டில் பழ வகைகளும் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக மா, பலா, வாழை போன்ற கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுகிறோம். புராதன காலம் முதலாக முனிவர், ரிஷிகள் சமைத்த உணவைத் துறந்து பெரும்பாலும் பால், பழம், ஆகியவற்றை உண்டார்கள். 

 
இதனால் நீண்ட காலம் திடகாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள். இதை புராண இதிகாசக் கதைகளும் எடுத்து கூறியுள்ளன. நாரதர் கொடுத்த மாங்கனிக்காக விநாயகரும் முருகனும் போட்டியிட்ட கதையை நாம் அறிவோம், அதேபோல் அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை உண்டதால் அவ்வைப் பிராட்டி நீண்டகாலம் வாழ்ந்த வரலாறும் உண்டு. பழங்களில் உள்ள சத்துக்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இத்தகைய காரணங்களினால் இறைவழிபாட்டில் பழங்கள் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.
 
பழங்களின் மருத்துவ குணங்கள்: 
 
ஆப்பிள் - வயிற்றுப்போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், இதய நோய்கள் ஆகியவைகளுக்கு நல்லது. 
 
நாவல் பழம் - நீரிழிவை நீக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும். 
 
திராட்சை - ஒரு வயது குழந்தையின் மலக்கட்டு, சளி ஆகியவற்றை நீக்கும். காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுத்து வந்தால் நீங்கும். 
 
கொய்யாப்பழம் - உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படும். சிவப்பு திராட்சை, தோல் வியாதியை போக்கும். 
 
எலுமிச்சை - மலச்சிக்கலைப் போக்கும். 
 
பப்பாளி, ஆரஞ்சு - மூல வியாதிக்காரர்களுக்கு நல்ல பயன் தரும். 
 
திராட்சை, சாத்துக்குடி - ரத்த அழுத்தத்திற்கு நல்லது.